வன்னியின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்கு பதிவு!!

347

வன்னி தேர்தல் மாவட்டத்தின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவால் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட இணைப்பாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 77.48 வீத பதிவாகியுள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

அத்துடன், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள், வாக்குப்பெட்டிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்துள்ளனர்.

பிரதம தலைமைதாங்கும் அதிகாரிகளிற்கு சகலவிதமான அறிவுறுத்தல்களையும் நாம் வழங்கியுள்ளோம்.

எனவே பெற்றுக்கொள்ளப்படும் வாக்குப்பெட்டிகள் சீல்செய்யப்பட்ட பின்னர் நாளை காலை 7 மணியளவில் வாக்கு எண்ணுவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும், தபால் வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள காமினி மகாவித்தியாலயம் ஆகிய பகுதிகள் கடுமையான பாதுகாப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.