யுவராஜ் சிங்கை அதிக விலை கொடுத்து வாங்கியது ஏன்?

443

Yuvraj

7வது ஐபிஎல் போட்டியில் யுவராஜ் சிங்கை அதிகபட்சமாக 14 கோடிக்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த ஐபிஎல் போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார்.

இந்நிலையில் 7வது சீசனில் இவரை பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணி 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் உரிமையாளர் விஜய் மல்லையா தனது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு கடந்த 17 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.

ஊழியர்களின் போராட்டங்களை கண்டு கொள்ளாத இவர், விமானங்களை இயக்காததால் கடந்த டிசம்பர் வரை 822 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தார். இந்த நிலையில் ஒரு தனிப்பட்ட வீரர் மீது 14 கோடியை முதலீடு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதுகுறித்து விஜய் மல்லையா கூறுகையில், யுவராஜ்சிங்கை வாங்க வேண்டும் என்பதில் எங்கள் அணியின் அணித்தலைவர் விராட் கோலி ரொம்ப ஆர்வமாக இருந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 4 கோடி கூடுதலாக போய் விட்டது.
ஆனாலும் ஏலத்தை தொடருவதா? முடிப்பதா என்பது ஏலம் நடத்துபவருக்கே உள்ள உரிமை.

கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ் ஏற்கனவே எங்களிடம் உள்ள நிலையில் யுவராஜ்சிங்கை வாங்கியதன் மூலம் எங்களது அணி மேலும் வலுவடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.