கோல்டன் கீ கிரடிட் காட் நிறுவனத்தின் தலைவர் தலைவர் லலித் கொத்தலாவல மற்றும் சிசிலி பிரியா கொத்தலாவல உட்ட பணிப்பாளர்களுக்கு சொந்தமான 550 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட சொத்துக்களையும் பணத்தையும் நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளது.
மேலும் குறித்த நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்களுக்கு திருப்பி கொடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட கோல்டன் எஸ்.ஜீ.வி. நிறுவனத்திற்கு பணத்தினை மாற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு அமைய லலித் கொத்தலாவல குடியிருக்கும் எலிசபெத் மாவத்தையில் உள்ள வீடு, சிசிலி பிரியா கொத்தலாவல சட்டத்திற்கு முரணாக உறவினர்கள் சிலருக்கு வழங்கிய 46 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான எஸ்.என்ட்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான 15 கோடிரூபாவுக்கும் மேற்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எஸ்.ஜீ.வி. நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
இதனை தவிர ரிசோட் என்ற நிறுவனத்தில் கொத்தலாவல தம்பதியினருக்கு சொந்தமான 50 வீத பங்குகள்.எஸ்.ஜீ.வி நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது. இதனை தவிர செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் 350 கோடி ரூபா பெறுமதியான பங்குகள் எஸ்.ஜீ.வி. நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு லலித் கொத்தலாவலவுக்கு சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எஸ்.ஜீ.வி நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்கள் கே.ஸ்ரீபவன், சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
கோல்டன் கீ கிரடிட் காட் வைப்பாளர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.