மொரீசியஸ் கரையில் கப்பல் விபத்து : கடலில் கலந்த பெருந்தொகை எண்ணெய்!!

443

கப்பல் விபத்து..

மொரீஷியசிஸ் (Mauritius) கடலில் விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து 1,000 தொன் அளவிலான எண்ணெய் கடலில் கசிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் நிறுவனமொன்றுக்கு சொந்தமான வகாஷியோ ( Wakashio) என்ற கப்பல் 3,800 தொன் அளவிலான எண்ணெய்யுடன் கடந்த மாதம் 25ம் திகதி மொரீஷியஸ் கடல் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த போது பவளப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து கப்பலில் பயணித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டபோதும் சேதமடைந்த கப்பலில் இருந்து பாரிய அளவில் எண்ணெய் கசிய ஆரம்பித்துள்ளது.

1,000 தொன் அளவிலான எண்ணெய் கடலில் கசிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீதமுள்ள 3 ஆயிரம் டன் எண்ணெயை கப்பலில் இருந்து வெளியே எடுக்கும் பணிகள் நடந்தன. எனினும் இந்த முயற்சி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் கப்பலிலிருந்து இதுவரை 1,000 தொன் எண்ணெய் கடலில் கசிந்து விட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இச்சம்பவத்தினையடுத்து அந் நாட்டுப் பிரதம் பிரவிந்த் ஜுக்நாத் (Pravind Jugnauth) நாடு தழுவிய சுற்றுச்சூழல் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். சர்வதேச உதவியையும் அவர் நாடியுள்ளார்.

இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு கப்பற்படை கப்பல், இராணுவ விமானம் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அந்த பகுதிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.