கொழும்பை விட யாழில் பாரியளவில் அதிகரிக்கும் தங்கத்தின் விலை : காரணம் என்ன?

42


தங்கத்தின் விலை..


வட மாகாணத்தில் தங்கத்தின் விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி வர்த்தக நிலையங்களில் தங்கம் ஒரு பவுனின் விலை, கொழும்பில் விற்பனை செய்வதை விடவும் 10 – 15ஆயிரம் ரூபாயில் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.கொழும்பில் 24 கரட் தங்கத்தின் விலை 97500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் யாழ்ப்பாணத்தில் அது ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.


22 கரட் தங்கத்தின் விலை கொழும்பை விடவும் யாழ்ப்பாணத்தில் 12000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் கருத்து வெளியிடுகையில்,


எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஆலய திருவிழாக்கள் நடைபெறும். இந்த மாதங்களில் திருமண நிகழ்வுகளும் அதிகமாக நடைபெறுவதால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இந்து மக்கள் மே மற்றும் ஜுன் மாதங்களிலேயே திருமண நிகழ்வுகளை அதிகம் ஏற்பாடு செய்கின்றனர். எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த நிகழ்வுகள் பிற்போடப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த இரண்டு மாதங்களில் அதிகளவான திருமணங்கள் நடைபெறவுள்ளமையினால் தங்கத்தின் விலை பாரியளவு அதிகாரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.