ரயில் ஓட்டுனர்களின் பணி பகிஸ்கரிப்பு இன்றும் தொடர்கிறது!!

443

Trainரயில் ஓட்டுனர்கள் சிலர் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை எந்தவித தீர்வையும் முன்வைக்காமையின் காரணமாக தமது போராட்டம் தொடர்வதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டார்.

ரயில் சாரதிகள் சங்க தலைவர் திசாநாயக்கவை மீண்டும் அதே பதவியில் நியமிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் ஓட்டுனர்களது போராட்டம் நேற்று முன்தினம் (13) ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஓய்வு பெற்ற ரயில் ஓட்டுனர்கள் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.