வவுனியாவில் 383 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு : 256 பட்டதாரிகள் நிராகரிப்பு!!

952

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்று ஓரிரு வாரங்களில் 50000 பட்டதாரிகளுக்கும் குறைந்த வருமானம் கொண்ட ஒரு இலட்சம் பேருக்கும் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தார்.

இத் திட்டம் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

நிறுத்தி வைக்கபட்டிருந்த குறித்த தொழில் வாய்ப்பு திட்டத்தின் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் 383 பட்டதாரிகள் தொழில் வாய்ப்புக்கு தெரிவாகியுள்ளதுடன் 256 பட்டதாரிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா வடக்கில் 32 பட்டதாரிகளும் , வவுனியா தெற்கில் 20 பட்டதாரிகளும் வெங்கல செட்டிக்குளம் பிரிவில் 28 பட்டதாரிகளும் வவுனியா நகரில் 303 பட்டதாரிகளும் மொத்தமாக 383 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளனர். மேலும் 19பட்டதாரிகளின் விண்ணப்பம் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நியமனம் பெறுபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன

வவுனியா தெற்கு: https://drive.google.com/file/d/19ITSYsxaF9rKBujksx26Usj3WP42xcpI/view?fbclid=IwAR2uT3CH_aYAgb9JxElBQYkslwlatmBDwVbhBqaG-mDuUhdTajRaRI-elc8

வவுனியா: https://drive.google.com/file/d/1nmIUbYzEN0YkIXkjd4_tqUasMEEstaa4/view?fbclid=IwAR2vyDLzQIhFkt-tMimc6HeIkeuOQXZH5vhiOObeRJkRddwNBV1oK4gW51E

வவுனியா வடக்கு: https://drive.google.com/file/d/1-kgKnFUYJ92TRItus_BwdeM98hzqE0Wl/view?fbclid=IwAR1FLWt6GsBWtmqMjdXNgXzZE9LmSwHMIJFGprNlGrpgojYMAD-WUaKZI_8

நிலுவையில் உள்ள பட்டியல்: https://drive.google.com/file/d/1obC5_y3oUbq_BfXJbmIOaWJRvBl1YbLa/view?fbclid=IwAR3QPr5pbFwHBVBHMYVTKmr2SJEneXxlDQhCKYnvu8dCKf9v0cJNCC5CiaY

நிராகரிக்கப்பட்ட பட்டியல்: https://drive.google.com/file/d/1i8OWTu7Yoa0dROVtbPdyekOwhFMG1O6M/view?fbclid=IwAR2cvSigdj3L3XW1eYEu668vdab-Q8KDRV4oPCD1_iyb5vgwTvTXp01A8T8