பத்தரமுல்லை இராணுவ தலைமையகத்தில் தீ விபத்து!!

1153

Fireகொழும்பு, பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய இராணுவ தலைமையக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது தீயணைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று (15) பிற்பகல் 5.50 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.