வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இன்றும் நாளையும் எண்ணெய் காப்பு!(படங்கள்)

1217

வவுனியா கோவில்குளம்  அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 28.08.2020 அன்று இடம்பெறவுள்ள அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித
புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிசேகத்தை முன்னிட்டு இன்று (26.08.2020)  காலை 8.00 மணியளவில்  வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களின் பூரண ஒத்துழைப்புடன் சுகாதார  நடைமுறைகளைப் பின்பற்றி  எண்ணெய்காப்பு நிகழ்வு இடம்பெற்றது.மேலும் நாளை பிற்பகல்  03.00வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு நிகழ்வில் கலந்து கொள்ளமுடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.