இலங்கை காட்டில் அதிசயமான வெள்ளை யானை!!

120


வெள்ளை யானை..


மாதுருஓயா தேசிய வனப் பகுதியில் வெள்ளை யானை ஒன்று சுற்றி திரிவது மற்றும் அந்த யானையின் புகைப்படத்தை அந்த வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன தன முகநூலில் வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலன்நறுவை வனஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டப்ளியூ.எம்.கே.எஸ். சந்திரரத்ன,வெள்ளை யானை தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. நேற்றும் வன அதிகாரி ஒருவர் அந்த யானையை பார்த்துள்ளார். வெள்ளை யானை ஒன்று மாதுருஓயா குளத்திற்கு அருகில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளது.


எனினும் இது குறித்து உறுதியாக கூற முடியாது. மரபணு மாற்றங்களால் இப்படியான விலங்கு இருக்கக் கூடும். அந்த விலங்கின் உடலில் வேறு ஏதாவது பட்டிருக்குமா என்றும் தெரியாது. புகைப்படங்களில் அப்படி தெரிந்தாலும் பரிசோதனையின்றி எதனையும் கூற முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.


வெள்ளை யானைகள் பற்றிய கதைகள் இதிகாசங்களில் காணப்படுகின்றன. இந்திரனின் வாகனமான யானையும் வெள்ளை நிறமானது என அவற்றில் கூறப்பட்டுள்ளது.