ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பகல் கனவு : குஷ்பு!!

562

Kushbooமுதல்வர் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பகல் கனவு என்றும், அது பலிக்காது என்றும் நடிகை குஷ்பு மாநாட்டில் பேசினார். மாநாட்டில் குஷ்பு பேசியது:

திருச்சி மாநாட்டை திருப்புமுனை மாநாடு என்று கூறுகின்றனர். நான் இந்த மாநாட்டை அதிமுகவின் சர்வாதிகார ஆட்சியை மாற்றம் செய்யும் திருப்புமுனை மாநாடு என்றுதான் சொல்வேன்.

தேர்தல் நேரம் என்பதால் அதிமுக அரசு தற்போது நாடகம் ஆடுகிறது. உண்மையில் ஜெயலலிதாவுக்கு தமிழகப் பிரச்னைகளில் அக்கறை இல்லை.

இதற்கிடையில் பிரதமராக வேண்டும் என்று ஜெயலலிதா கனவு காண்கிறார். அது பகல் கனவு. பலிக்காது. தமிழகப் பிரச்னையையே தீர்க்க முடியாதவர், தேசிய பிரச்னையை தீர்க்கப் போகிறேன் என்று கூறுகிறார். இதை தமிழக மக்கள் நம்புவார்களா?

வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோற்கும். திமுக மீது சில குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன.

அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் திமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள். 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். 6-ஆவது முறையாக கருணாநிதி முதல்வராக அமர்வார் என்றார் அவர்.