தேர்தல் வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்!!

560

Electionஎதிர்வரும் தேர்தல்களின் போது வாக்களிப்பு நேரத்தில் மாற்றங்களை கொண்டு வர தேர்தல்கள் திணைக்களம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

தற்போது காலை 7 மணிக்கு தேர்தல் வாக்களிப்புகள் ஆரம்பிக்கப்படுவதால் அதிகாரிகள் குறிப்பாக பெண் அதிகாரிகள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

எனவே வாக்களிப்பு நேரத்தை காலை 8 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிவரை நீடிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களின் போது இந்த முறையை அமுல் செய்வது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.