பேருந்துகள் தொடர்பில் கடுமையாகும் மற்றுமொரு சட்டம்!!

761

பேருந்துகள் தொடர்பில்..

மேல் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்புவதற்காக செல்லும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படவுள்ளது.

அவ்வாறு பயணிகளை அழைத்து செல்லும் பேருந்து ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதுடன் அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்புவதற்கு பயணிகளை அழைத்து செல்வதென்பது மிகவும் ஆபத்தானதெனவும், பாதுகாப்பதற்றதெனவும் அதிகார சபையின் தலைவர் பிரச்ன சன்ஜீவ தெரிவித்துள்ளார்.

தினசரி பேருந்துகளுக்கு அவசியமான எரிபொருட்களை முன்னரே பெற்றுக் கொள்வது ஊழியர்களின் பொறுப்பாகும். பேருந்துகளுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பயணிகளுடன் எரிபொருள் நிலையத்திற்கு செல்வதென்பது ஆபத்தான குற்றமாகும்.

அவ்வாறு செயற்படும் பேருந்து ஊழியர்கள் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.