வவுனியாவில் கிராம சேவையாளரின் இடமாற்றத்திற்கு எ திர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போ ராட்டம்!!

391

இராசேந்திரகுளம்..

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட இராசேந்திரகுளம் கிராம சேவையாளரின் இடமாற்றத்திற்கு எ திர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களினால் போ ராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் இராசேந்திரகுளம் கிராம சேவையாளரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (29.08.2020) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

கிராம சேவையாளர் ப.பிரதீப் இராசேந்திரகுளம் பிரிவுக்கு நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக சிறப்பாக சேவையாற்றி வருகின்ற சமயத்தில் அவருக்கு பிரதேச செயலாளரினால் கந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

பிரதேச செயலாளரினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தினை இரத்து செய்யக்கோரி அப்பகுதி மக்களினால் கவனயீர்ப்பு போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் , வேண்டாம் வேண்டாம் இடமாற்றம் வேண்டாம் , இடமாற்றத்தினை இரத்து செய்து அவரை சேவை செய்ய விடுங்கள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் அப்பகுதி மக்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போ ராட்ட இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடி இடமாற்றத்தினை இரத்து செய்யுமாறு தெரிவித்தமையினையடுத்து இடமாற்றத்தினை இரத்து செய்யவதாக பிரதேச செயலாளர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு இவ்விடயத்தினை தெரிவித்தமையினையடுத்து போ ராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.