வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்ய முற்றாக தடை : ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை!!

430

ஆடை இறக்குமதி..

வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்வதை முற்றாக தடை செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக பதிக் மற்றும் கைத்தறி நெசவு ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெறும் கண்காட்சி ஒன்றை நேற்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இறக்குமதி தற்போது பெருமளவில் குறைந்துள்ளது. அத்துடன் ஏற்றுமதியும் பெருமளவில் குறைந்துள்ளது.

இலங்கையில் எமது தேசியத்தை அடிப்படையாக கொண்ட தேசிய வளங்களை வலுப்படுத்தி அவற்றை பாதுகாத்து எமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்யும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

தேசிய ஆடை உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். இதடினப்படையில் வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்வதை நிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேசிய ரீதியில் புதிய ஆடை தொழிற்சாலைகளை அதிகளவில் ஆரம்பிக்க தேவையான சூழலை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-