விமான நிலையத்தை மீளத் திறப்பது குறித்து இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை!!

425

விமான நிலையம்..

உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறையாத நிலையில், இலங்கைக்கான நுழைவு புள்ளிகளை திறப்பதற்கு எவ்வித நகர்வுகளும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொரோனா தொற்றில் இருந்து நாட்டை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வரும் எவரும் இலங்கைக்குள் கொரோனா தொற்றை கொண்டு வரமுடியும் என சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் ஊடாக சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் நுழைந்த அனைவரும் (முக்கியமாக இலங்கை திரும்பியவர்கள்) பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, ச ட்டவி ரோதமாக குடியேறுபவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படையால் வலுவான எல்லைக் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் குறிப்பாக வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் ஒரு சிலரைக் கூட கண்டுபிடிப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ச ட்டவி ரோத இடம்பெயர்வுக்கு எ திராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், அதே நேரத்தில் சுகாதாரம், முகக்கவகம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணல் போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

விமான நிலையத்தை மீள திறப்பது குறித்து அமைச்சரவையில் விவாதித்து வருகின்றனர். எனினும் உறுதியான முடிவுகள் எதுவும் இதுவரையில் எடுக்கவில்லை.

விமான நிலையம் மூடப்பட்டுள்ளதனால் வருமானம் மற்றும் வாழ்வாதார இழப்பு ஏற்படுகிறது, மறுபுறம் கொரோனா தொற்று நாட்டில் மக்கள் மூலம் பரவினால், பாதகமான விளைவுகள் ஏற்படும். “தற்போது வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரவேண்டும்.

அந்த வகையில் நாடு திரும்ப சுமார் 54,000 பேர் பதிவு செய்துள்ளனர், முக்கியமாக மேற்கு ஆசியாவில் கடுமையான நெருக்கடியில் உள்ளனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.