இலங்கையில் ஏற்பட்ட நில அதிர்வு : தொடர்ந்து நீடிக்கும் மர்மம்!!

397

நில அதிர்வு..

கண்டியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நில அதிர்விற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கண்டி, விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் தலாத்துஓய, குருதெனிய, ஹாரகம, திகன மற்றும் அனுரகம ஆகிய பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நில அதிர்வு ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவின் அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 29ஆம் திகதி இரவு 8.30 – 8.32 மணியளவில் இந்த திடீர் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலுக்கமைய கண்டியில் இருந்து 12 கிலோ மீற்றர் தூரம் வரை இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சுனாமி எச்சரிக்கை மத்திய நிலைய அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கண்டிக்கு சென்று பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கல் குவாரியின் வெடி விபத்து உட்பட 3 விடயங்கள் இந்த அதிர்விற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் உறுதியான தகவல் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.