சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இன்று : பீரிஸ் பங்கேற்பு!!

530

SAARCசார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 35வது மாநாடு மாலைத்தீவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் ஜீ.எல்.பிரீஸ் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

வலய ஒத்துழைப்பு, உணவுப் பாதுகாப்பு, சூழல் மாற்றும், கல்வி மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பில் சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளன.

இன்று ஆரம்பமாகும் சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.