தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்ற மகனை விற்ற தந்தை!!

303

jailசீனாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தையை விற்ற தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சீனாவில் உள்ள குயிஷ்ஹு மாகாணத்தை சேர்ந்தவர் ஷோயூ. இவர் அங்குள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய இசை போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினார். அதன் மூலம் பெரிய பாடகராக திட்டமிட்டார்.

இசை நிகழ்ச்சியில் பங்கேற்க குறிப்பிட்ட அளவு பணம் முன் பணத் தொகையாக கட்ட வேண்டி இருந்தது. அதற்காக தான் பெற்ற 4 மாத ஆண் குழந்தையை 1 இலட்சம் ரூபாய்க்கு கடத்தல்காரர்களிடம் விற்றார்.

இச்சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது. ஆனால் தனது மகன் கடத்தப்பட்டதாக நாடகம் ஆடினார். ஒரு கட்டத்தில் அவன் தனது கணவரால் விற்கப்பட்டான் என்ற தகவல் மனைவிக்கு தெரிய வந்தது.

எனவே இது குறித்து பொலிசில் புகார் செய்தார். பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி ஷோயூவை கைது செய்தனர். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷோயூக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.