இலங்கையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

830

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மற்றும் நியுஸிலாந்து போன்ற மிகவும் முறையாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நாடுகளில் கூட மீண்டும் கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு ஊரடங்கு வரை செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிலமையில் சிறிய தீவான எமது நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவ்வாறு இல்லாவிடின் கடந்த மாதங்களை போன்று மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-