50 வயது காதலிக்கும் 17 வயது காதலனுக்கும் பொலிஸ் பாதுகாப்பு!!

567

Loveசமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் 50 வயது பெண்ணை காதலித்து வருவதுடன் அந்தப் பெண்ணையே திருமணம் செய்வேன் என பிடிவாதமாக உள்ளான்.

உ.பியின் மீரட் நகரில் 17 வயதான மாணவர் ஒருவர் பொலிசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அதில் ´நான், 50 வயதாகும் பெண் ஒருவரை காதலிக்கிறேன், அவருடன் ஆறு மாதங்களாக நெருங்கிப் பழகி வருகிறேன், அவரையே மணக்க விரும்புகிறேன்;

அதற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என, அந்த மாணவன் தெரிவித்திருந்தான். மனுவை படித்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தனர். எட்டு குழந்தைகளுக்கு தாயான, அந்தப் பெண் வாழ்ந்தால் இவரோடு தான் வாழ்வேன், இல்லையேல், இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்து கொள்வோம் என்றார்.

அந்தப் பள்ளி மாணவனுக்கு வயது 17 தான் ஆகிறது. திருமணம் செய்து கொள்ளும் வயது ஆகவில்லை. எனவே, அவனை மறந்துவிடு என, பொலிசார் அறிவுரை கூறினர். எனினும், அதை ஏற்றுக் கொள்ளாத அப்பெண், கோபத்தில் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறினார்.

அங்கு கூடியிருந்த, மாணவனின் உறவினர்கள், அந்த பெண்ணை, நையப்புடைத்தனர். பொலிசார் தலையிட்டு, அவரை, அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர். திருமண வயதாகும் வரை காத்திருப்போம் என கூறியுள்ள காதலர்களுக்கு பொலிசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.