தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்து : பெற்றோர்களுக்கு விசேட வைத்தியரின் முக்கிய அறிவிப்பு!!

402

முக்கிய அறிவிப்பு..

நாட்டில் தற்போது அதிக வறட்சியான காலநிலைய நிலவி வருகின்றமையினால் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிள்ளைகளுக்கு வெப்ப அலர்ச்சி நிலைமைகள் ஏற்படலாம் என்பதனால் பிள்ளைகளுக்கு முடிந்தளவு நீர் வழங்குமாறு குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

நீர் சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகளை வழங்குவதற்கும் தினமும் குளிப்பதற்கு பிள்ளைகளை பழக்குமாறும், வெயிலில் அதிக நேரம் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக அரிப்பு, தோல் அலர்ச்சி, தடிப்புகள் மற்றும் கொப்பளங்கள் போன்ற தோல் நோய்களை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூழலில் அதிகப்படியான தூசி காரணமாக குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், முடிந்தவரை மாஸ்க் அணிவது நல்லது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.