வானில் இருந்து வீழ்ந்த மர்ம பொருளால் வீடு தீக்கிரை!!

578

fireநுவரெலியா மாவட்டம் வலப்பனை – ராகலை தோட்டத்தில் உள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் காரணமாக தீ ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதேவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.வீட்டின் கூரையில் ஆறு அங்குல அளவான துளை ஏற்பட்டுள்ளது.

வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருளின் சிதைவுகள் கிடைக்காத போதிலும், இந்த சம்பவம் குறித்து பேராதனை பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழுவொன்று விசேட ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

மர்ம பொருள் விழுந்த வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.