கன்னட பட அதிபரை காதல் திருமணம் செய்யும் பாவனா!!

340

Bhavana

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், பாவனா. இவர் அசல், தீபாவளி, ஜெயம் கொண்டான், கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

கேரளாவை சேர்ந்த இவர் முதலில் மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தார். பிறகு சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இங்கு பட வாய்ப்புகள் குறைந்ததும் தெலுங்கு பட உலகுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கன்னட பட உலகில் அடைக்கலமானார்.

கன்னட படங்களில் நடித்து கொண்டு இருந்த போது பாவனாவுக்கு, நவீன் என்ற கன்னட பட அதிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள். பாவனாவும், நவீனும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு 2 பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து பாவனா–நவீன் திருமணம் வருகிற ஓகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. திருமணத்தை கேரளாவில் நடத்துவதா? அல்லது பெங்களூரில் நடத்துவதா? என்பது பற்றி 2 பேரின் பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.