இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரியான தமிழ் யுவதி பரிதாப மரணம்!!

957

அமிதா சுந்தரராஜ்..

இலங்கை மத்திய வங்கியின் உதவி இயக்குனராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகத்திலும் முக்கிய பதவிவகித்து வந்த அமிதா சுந்தரராஜ் (34), நேற்று முன்தினம் மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில் உ யிரிழந்துள்ளார்.

லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதித்தடைகளை உடைத்துக் கொண்டு, எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியை மோதித்தள்ளியதில் இந்த விபத்து நேர்ந்தது.

இலங்கையில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பின்னர், அமெரிக்காவில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றிருந்தார். இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான கிருஷாந்தா சில்வா (52) என்பவரும் ப லியானார்.