மாணவி தற்கொலை விவகாரம் : சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணை!!

533

Sucideகுருணாகலை புனித ஜோன் வித்தியாலயத்தில் அண்மையில் மாணவியொருவர் முகப் புத்தகத்தில் தனது புகைப்படம் வெளியானதையிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாடசாலை அதிபர் அந்த மாணவியை விசாரித்த விதம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதன்பொருட்டு விசேட குழுவொன்று இன்று குருணாகலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அந்த குழுவின் அறிக்கைக்கு அமைய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதேவேளை, இப்பாகமுவ ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலும் அந்த குழு விசாரிக்கவுள்ளது.