முகக் கவசம் அணியாதவர்களை சவப்பெட்டியில் படுக்க வைத்து வினோத தண்டனை : எந்த நாட்டில் தெரியுமா?

683


முகக் கவசம் அணியாதவர்களை..



இந்தோனேஷியாவில் முகக்கவசம் அணிய மறுக்கும் நபர்களுக்கு த ண்டனை அளிக்கும் விதமாக அவர்கள் சவப்பெட்டியில் சில நிமிடங்கள் படுக்க வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்து,




அந்த வகையில், இந்தோனேஷியாவின் தலைநகர் Jakarta-வில் முகக்கவசம் அணியாமல் மறுக்கும் நபர்கள் பிடிக்கப்பட்டு, சவப்பெட்டியில் சில நிமிடங்கள் படுக்கவைக்கப்பட்டனர்.


இதன் மூலம் அவர்கள் செய்ய கூடிய தவறு எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பதை உணர வைப்பதற்காக பொலிசார் இப்படி செய்தனர்,

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை பொலிசாரிடம் சிக்கியவர்களுக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி முகக்கவசம் இல்லாமல் பிடிபடும் மக்களுக்கு, சமூக சேவை செய்வது மற்றும் அபராதம் போன்றவையும் உள்ளது.


அதிகாரியான Pasar Rebo என்பவர், கு ற்றவாளிகள் தானாக முன்வந்து அபராதம் செலுத்தவோ அல்லது சமூக சேவையைப் பெறவோ சவப்பெட்டியில் வைக்க விரும்புவதாகக் கூறினார்.

அவர்கள் சமூகப் பணிகளைத் தேர்வுசெய்தால், அவர்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பொது வசதிகளை சுத்தம் செய்ய வேண்டியிருந்தது.

அவர்கள் ஏன் அபராதம் செலுத்தவில்லை என்ற போது, ​​அவர்களிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். இப்படி கொடுக்கப்படும் த ண்டனை கடும் விமர்சனங்களை சந்தித்து வந்ததால், கடந்த வெள்ளிக்கிழமை இது நீக்கப்பட்டது.

மேலும், Jakarta-வில் உள்ள பிற மாவட்டங்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இறப்பு விகித தரவுகளைக் கொண்ட மினி சவப்பெட்டி நினைவுச்சின்னங்களை கட்டியுள்ளது நினைவுகூரத்தக்கது.