கச்சத்தீவை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை : இந்திய மத்திய அரசு!!

568

Kachatheevu

கச்சத்தீவை மீட்கக்கோரி தி.மு.க. தலைவர் கலைஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “இந்தியா கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கவில்லை. 1974ல் கடல் எல்லையை வரையறை செய்தபோதே கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது.

இலங்கையுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. கச்சத்தீவை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது.