க.பொ.த சா/த செயன்முறைப் பரீட்சைகள் மார்ச் 4இல் ஆரம்பம்!!

696

OL2013ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செயன்முறைப் பரீட்சைகள் நாடு முழுவதிலுமுள்ள 1,163 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளன. இம்முறை இடம்பெறவுள்ள செயன்முறைப் பரீட்சையில் 57,551 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

பாடசாலை பரீட்சாத்திகள் தமது பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனியார் பரீட்சாத்திகள் தபால் திணைக்களங்கள் ஊடாகவும் தமது அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.