கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

714

கோர விபத்து..

அண்மைய காலங்களில் இலங்கையில் வாகன சாரதிகள் மத்தியில் ஹெ ரோ யி ன் பயன்பாடு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ம் திகதி மட்டக்குளியில் மத்திய வங்கியின் உயர் அதிகாரி உட்பட இருவர் கொ ல்லப் பட்ட விபத்தில் லொரியின் சாரதியின் இர த்தத்தில் ஹெ ரோ யி ன் கலந்திருப்பது பொலிஸ் வி சாரணையில் தெரியவந்துள்ளது.

28 வயதான லொரியின் சாரதிக்கு, சாரதி அனுமதி பத்திரம் இல்லை எனவும், விபத்துக்கு ஆறு நாட்களுக்கு முன்னர் அவர் ஹெ ரோ யி ன் ப யன்படுத்தியதாக இரத்த ப ரிசோ தனைகள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

வெல்லம்பிட்டியில் வசிக்கும் குறித்த சாரதி மோதரையில் இருந்து வத்தளைக்கு முட்டைகளை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது, அந்த சமயத்தில் அவரது லொரி எதிர் திசையில் வந்த இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதியது.

இரண்டு வாகனங்களுடன் மோதிய போதிலும் லொரி தொடர்ந்து நகர்ந்ததாகவும், இறுதியில் ஒரு கட்டடத்தின் மீது மோ தியதாகவும், அதைத் தொடர்ந்து சாரதி அங்கிருந்து த ப்பி சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

46 வயதான டைரோன் ரஞ்சித் மற்றும் 33 வயதான மத்திய வங்கியின் மூத்த உதவி இயக்குநர் அமிதா சுந்தரராஜ் ஆகியோர் முதல் முச்சக்கர வண்டியில் பயணம் செய்திருந்தனர். விபத்தை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இருவரும் உ யிரி ழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது முச்சக்கர வண்டியின் சாரதியான 50 வயதான அஜித் சில்வாவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உ யிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவருடன், பயணித்த பயணி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீ விர சி கிச்சையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

லொரியின் சாரதி அதிவேகமாகவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். குறித்த லொரியின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது வி ளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.