சிசிலி கொதலாவலவை பிரிட்டனிலிருந்து நாடு கடத்த இன்டர்போலின் உதவி!!

1027

Kottalawalaசெலின்கோ மற்றும் கோல்டன் கீ குழும நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான லலித் கொதலாவலவின் மனைவி சிசிலி பிரியா கொதலாவலவை பிரிட்டனிலிருந்து நாடு கடத்த இன்டர்போலின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு இன்டர் போலின் உதவியை பெற்றுக்கொள்ள உள்ளனர். சிசிலி தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார்.

சிசிலியை நாடு கடத்த இன்டர் போல் என்னும் சர்வதேச பொலிஸாரிடம் கோருமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம், குற்ற விசாரணைப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிசிலியை கைது செய்வதற்கான சர்வதேச பிடிவிராந்து உத்தரவிற்கான விசேட ஆவணமொன்றையும் நீதிமன்றிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கோல்டன் கீ நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களது 550 கோடி ரூபா சொத்துக்களை பறிமுதல் செய்து, வாடிக்கையாளர் வைப்புச் செய்த பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.