மின்னஞ்சல் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

1122

மின்னஞ்சல்..

மெக்ரோஸ் என்ற கணனிமொழியை பயன்படுத்தி கணனிக் கு ற்றவாளிகள் மின்னஞ்சல் மோசடிகளில் ஈடுபடுவதாக இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அறியப்பட்ட தொடர்பின் ஊடாக இணைய பயனர்களுக்கு வரும் மின்னஞ்சல்களின் ஊடாக இந்த மோ சடிகள் இடம்பெறுவதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல்களில் பெரும்பாலானவை மைக்ரோசாஃப்ட் ஒபிஸ் ஆவணம்,அதாவது அலுவலக ஆவணக் கோப்பு, எக்செல் ஆவணக் கோப்பு அல்லது மைக்ரோசாஃப்ட் ஒஃபீஸ் தொகுப்பு தொடர்பானஆவணக் கோப்புகளின் ஒரு இணைப்பாக உள்ளது. பயனர்கள் குறித்த இணைப்பைத் திறக்கும்போது, மேக்ரோக்களை இயக்குமாறு பயனர் கேட்கப்படுவர்.


இதன்போது மேக்ரோ-இயக்கப்பட்ட ஆவணங்கள் தீங்கிழைக்கும் நிரல்களை நிறுவலாம் அல்லது தாக்குதல் நடத்துபவர்களை கணனிகளுடன் இணைக்கவும் தனிப்பட்ட தரவை சேதப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது.

எனவே அறியப்பட்ட தொடர்பு என்ற வகையில் வரும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் இணைப்புகளைத் திறப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு பயனர்களை அறிவுறுத்தியுள்ளது.


அத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட இணைப்பில் மேக்ரோக்களை இயக்குமாறு கேட்கும் போது பயனர்கள் மேக்ரோக்களை அதனை இயக்குவதைத் தவிர்க்குமாறும் இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு கோரியுள்ளது.