சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரையும் விடுதலை செய்யுமாறு ஜெயலலிதாவிடம் கோரிக்கை!!

747

Jeyaராஜிவ் கொலையாளிகளின் மனு மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைந்துள்ளது. இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறுகையில்..

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் மூன்று பேரையும் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்றார்.

இவ்விடயம் குறித்து ம.தி.மு.க,, பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது..

இந்த தீர்ப்பு இந்திய நாட்டின் நீதித்துறை சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். ராஜிவ் படுகொலைக்கு துளியும் தொடர்பில்லாத பேரறிவாளன், முருகன், சாந்தன் என்ற மூன்று பேர் சிறையில் கொடுமை அனுபவத்துள்ளனர்.

தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கூறுகையில்..

கால தாமதத்திற்கு அரசு எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. அவர்கள் சிறைச் சாலையில் மகிழ்ச்சியோடு இருந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 432 பிரிவின் கீழ், மாநில அரசே அவர்கள் மூவரையும் சிறையில் இருந்து விடுதலை செய்வதையும் பரிசீலிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முதல்வரின் அதிகாரத்தை பயன்படுத்தி மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலிதாவை கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தி உள்ளது. இலங்கை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு வைகோ கூறினார்.