வவுனியா சுகாதாரத் தொழிலாளர்களின் போ ராட்டம் கைவிடப்பட்டது!!

767

சுகாதாரத் தொழிலாளர்களின் போ ராட்டம்..

வவுனியா நகரசபை சபை தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உறுதி மொழியையடுத்து சுகாதார தொழிலாளர்களின் போ ராட்டம் இன்று(10.09.2020) மாலை கைவிடப்பட்டது.

சம்பளப் பி ரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபை சுகாதார தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் கடந்த திங்கள் கிழமை முதல் பணிப்பு றக்கணிப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த போ ராட்டம் தொடர்பில் வவுனியா நகரசபையின் விசேட அமர்வு இன்று நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நகரசபை தலைவரால் இன்று மாலை போ ராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு உறுதிமொழி கடிதம் வழங்கப்பட்டது.

அதில், நகரசபையின் அட்டவணைப்படுத்தப்படாத ஊழியர்களின் சம்பள ஏற்ற தாழ்வு தொடர்பான கோரிக்கையை மீள் பரிசீலனை செய்வதற்கு சபை உத்தியோகத்தர்கள் கொண்ட குழுவுடன் இணைந்து குறித்த விடயத்துடன் தொடர்புடைய ஒருவரை நியமித்து சம்பளத்தை மீள் பரிசீலனை செய்வதாக விசேட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே தாங்கள் மேற்கொள்ளும் போ ராட்டத்தை நிறுத்தி உடன் கடமைக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த போ ராட்டமானது தற்காலிக நிறுதப்பட்டு கடமைக்கு தீரும்புவதாகவும், எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் சுகாதார தொழிலாளர்கள் தெரிவித்தனர்.