நாட்டில் விமான நிலையங்கள் மூடப்படவில்லை : அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

704

விமான நிலையங்கள்..

நாட்டிலுள்ள விமான நிலையங்கள் மூடப்படவில்லை என அமைச்சர் டீ.வி.சானக்க தெரிவித்துள்ளார். எனினும், கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார், “நாட்டில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று ஒரு கருத்து உள்ளது. எனினும், நாங்கள் விமான நிலையங்களை மூடவில்லை. அவை இப்போதும் கூட திறந்திருக்கும்.

ஆனால், விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். விமான நிலையங்களில் அனைத்து வசதிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சகம் மற்றும் கொரோனா தடுப்பு குழுவின் பரிந்துரைகளின் பேரில் விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை நாங்கள் தீர்மானிக்க முடியும்.

இதேவேளை, கடந்த ஆட்சியின் போது விமான நிலையங்கள் உருவாக்கப்படவில்லை, அத்துடன், மத்தல விமான நிலையம் புறக்கணிக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை அபிவிருத்தி செய்து முடிக்க முடியவில்லை.

எனினுமு், பதவிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது முனையத்தில் பணிகளைத் தொடங்க முடிந்தது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆறு மில்லியன் பயணிகளை மட்டுமே நாங்கள் கையாள முடிகிறது. இரண்டாவது முனையத்தை நிர்மானித்து முடித்த பின்னர் அதை இரட்டிப்பாக்க முடியும்,

இதேவேளை, மத்தல சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.