ஆசனவாயில் மறைத்து சென்னைக்கு தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முயன்ற பெண் கைது!!

647

Goldஇரண்டு தங்க பிஸ்கட்டுக்களை ஆசனவாயில் மறைத்து வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சென்னை நகருக்கு செல்ல முயன்றபோதே இவர் கைதானதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி தெரிவித்துள்ளார். சந்தேகநபரிடம் சோதனையிட்ட போது, 596 கிராம் நிறையுடைய இரு தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றின் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபாய் என லேஸ்லி காமினி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 46 வயதான கோதடுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.