தீவிர கொரோனா அ ச்சுறுத்தலில் மன்னார் மாவட்டம் : மக்களுக்கு எச்சரிக்கை!!

894

கொரோனா..

இந்தியாவில் இருந்து வரும் நபர்களின் அதிகரிப்பினால் மன்னாரில் தொடர்ந்தும் தீவிர கொரோனா அ ச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பா துகாப்பு பிரிவினரை கொரோனாவில் இருந்து பா துகாப்பதற்கு எடுக்க கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மரணங்களின் எண்ணிக்கையும் பாரியளவு அதிகரித்துள்ளன.

இதனால் மன்னார், தலைமன்னார் பகுதிகளுக்கு இந்தியா ஊடாக கொரோனா மிகவும் இலகுவதாக நெருங்க கூடும் என பா துகாப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ச ட்டவி ரோதமாக இந்தியாவில் இருந்து படகு மூலம் மன்னாருக்கும் வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் இந்திய மீனவர்கள் மன்னார் ஊடாக வருவது அதிகரித்துள்ளமையினால் கொரோனா பரவும் ஆபத்து தீவிரமடைந்துள்ளது.

கடல் வழியாக வரும் நபர்களை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏனைய பா துகாப்பு பிரிவினர் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர்.

இதுவரையில் மன்னாரில் அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளமையினால் பாடசாலை மாணவர்கள் பாரிய அளவில் மன்னார் நகரிற்கு வந்து செல்கின்றனர்.

அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.