வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலைக்கு ஒலிபெருக்கி தொகுதி புளொட் மோகனால் அன்பளிப்பு!!(படங்கள்)

371

நகர பிரதேச சிறார்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் முகமாக, வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையினரின் அனுசரணையில் வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலைக்கு ஒலிபெருக்கித் தொகுதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திருக.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் நேற்று (2014-02-18) கழக ஸ்தாபகரின் மகளான செல்வி ச.பூஜா அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டே மேற்படி ஒலிபெருக்கித் தொகுதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி கே.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் திரு எஸ்.தவபாலன் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சிரேஷ்ட உறுப்பினரும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஆலோசகருமாகிய திரு எம்.கண்ணதாசன், கோவில்குளம் இளைஞர் கழக செயலாளர் ஜனார்த்தனன், கோவில்குளம் இளைஞர் கழக இணைப்பாளர் காண்டீபன், கோவில்குளம் இளைஞர் கழக தொழில்நுட்ப பிரிவின் இயக்குனர் சதீஸ் மற்றும் கழக உறுப்பினர்களான சந்திரன், சுகந்தன் ஆகியோரும் இவ் நிகழ்வில் பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்களும் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்து தலைமை உரையாற்றிய பாடசாலை அதிபர் திருமதி கே.நந்தபாலன் அவர்கள், நீண்டகாலமாக தனித்து இயங்கிவரும் எமது சைவபிரகாச ஆரம்ப பாடசாலைக்கு இவ்வாறான உதவியினை ஒழுங்கமைத்து தந்த முன்னாள் உப நகர பிதா சந்திரகுலசிங்கம் அவர்களுக்கும் இவ் உதவியினை ஏற்படுத்தி தந்த கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளை இணைப்பாளர் மோகன் ராஜு அவர் தம் குடும்பத்தினருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளையும் அவர்களின் சேவை தொடர பாராட்டுகளையும் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் பெறப்பட்ட வளங்களை சிறார்கள் உச்ச வினைத்திறனுடன் பயன்படுத்தி நாளைய வன்னி மண்ணின் சிறந்த தலைவர்களாக உருவாக வேண்டும் எனவும். ஆரம்ப கல்வி என்பது ஆசான்களின் சிறந்த வழிகாட்டலில் தான் சிறப்புற அமையும் எனவே அவ்வாறன ஆசான்களின் நெறிப்படுத்தலில் எமது மாணவ செல்வங்கள் தமது கற்றல் ஒழுக்கம் என்பவற்றை சிறந்த பாதையில் கொண்டுசெல்ல வாழ்த்தி தனது உரையினை நிறைவு செய்தார்.

தொடர்ந்து நன்றியுரை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் திரு எஸ்.தவபாலன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

1 2 3 4 5