வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை : உங்களை கண்காணிக்கும் விமான படையின் கமரா!!

680

வாகன சாரதிகளுக்கு..

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலுள்ள வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதறக்காக வீதி ஒழுங்கை முன்னெடுக்கும் நடடிக்கை நேற்று முன்தினம் முதல் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய வாகன நெரிசலை குறைப்பதற்காக மீண்டும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி ஒழுங்கை முறையின் செயற்பாடு குறித்த கண்காணிக்க விமான படையின் ட்ரோன் கமாரா தொழில்நுட்பத்தினை பயன்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய கொழும்பு நகரத்தின் பிரதான நுழைவாயிலாக கருதப்படும் ராஜகிரிய, நுகேகொடை, பொரளை மற்றும் காலி வீதியை கண்கானிக்கும் வகையில் விமானப்படை 4 ட்ரோன் கமராகள் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளன.

இந்த ட்ரோன் கமரா மூலம் போக்குவரத்து நெரிசல் தொடர்பில் பெறப்படும் தகவல்கள் உடனடியாக பொலிஸாரிடம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கை விமான படையினால் இது தொடர்பான காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.