தீக்குளிக்க முயற்சித்த சிங்கள ராவய பிக்கு விளக்கமறியலில்!!

574

Pikkuமாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை எதிர்த்து தீக்குளிக்க முயற்சித்த சிங்கள ராவய அமைப்பின் பிக்கு ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு , கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் தீக்குளிக்க முயற்சித்த சூரியவெவ தம்மதூத ஆஸ்ரமத்தை சேர்ந்த தம்மதெனியே தம்மதின்ன தேரரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட தேரரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிக்கு எதிர்ப்பில் ஈடுபட்டதுடன் பெட்ரோல் கலனுடன் மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், தீக்குளிக்க முயற்சித்தாகவும் அவர் தீக்குளித்திருந்தால், அந்த சம்பவம் கலவரமாக மாறியிருக்கும் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.