வவுனியா பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக பாதுகாப்பு கடமையில் பொலிஸார்!!

826

பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக..

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக பொலிஸார் இன்று பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபியில் இருந்து யாழ். நல்லூர் வரையிலான நடைபயணம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியினால் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பொலிஸார் அதற்கு தடைவிதித்துள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் குறித்த நடைபயணம் இன்று இடம்பெறவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலை முதல் பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இது குறித்து பொலிஸாரிடம் கேட்டபோது, இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச இன்றைய தினம் வவுனியா நகரசபை மண்டபத்திற்கு வருகை தருவதினால் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கடந்த வருடத்தைப் போன்று தியாகி திலீபன் நினைவேந்தல் நினைவாக நடைபயணம் வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி செல்ல இருந்த நிலையில் பொலிஸார் அந் நடை பயணத்திற்கு அனுமதி மறுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மத்திய குழு மற்றும் செயற்குழுக்களில் அங்கம் வகிக்கும் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் குறித்து தகவல் திரட்டும் பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் அவர்கள் தொடர்பாக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது தியாகி திலீபன் நினைவேந்தல் தொடர்பில் வி சாரணைகள் இடம்பெற்றதாக கட்சி செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வி சாரணைகளை முன்னெடுத்து அ ச்சுறுத்தல் விடுவதன் மூலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை முடக்குவதற்கு பா துகாப்பு தரப்பு முனைவதாகவும் அக் கட்சி தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-