மகளை பார்க்க முருகன்–நளினி ஏக்கம்!!

664

Nalini-Murukanநளினியின் தாயார் பத்மா, முருகன் தாயார் சோமணி ஆகியோர் நேற்று வேலூர் சிறையில் முருகன், நளினியை சந்தித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது..

தூக்கு தண்டணை இரத்து செய்து தீர்ப்பு கூறிய நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், அரசியல் கட்சியினர், மாணவர்கள், போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பாடுபட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. அதேபோல் அனைவரையும் விடுவிக்க முயற்சிக்கவேண்டும்.

முருகன்–நளினியின் மகள் அரித்ரா லண்டனில் டாக்டருக்கு படித்து வருகிறார். பிறந்தது முதல் பெற்றோரை பிரிந்து வாழும் அவர் நளினி–முருகனை சந்திக்க விரும்பினார். ஆனால் அவருக்கு விசா மறுக்கப்பட்டு உள்ளது.

பெற்றோரை பிரிந்து வாழும் மகளை அவர்களுடன் சேர்ந்து வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

முருகன்–நளினி இருவரும் அவர்களது மகள் அரித்ரா பற்றி அவர்களிடம் நீண்ட நேரம் பேசியுள்ளனர். மகளை பார்க்கும் பிள்ளை பாச ஏக்கத்துடன் உள்ளனர். அரித்ராவின் எதிர்காலம் கருதி முருகன்–நளினியை விடுதலை செய்ய வேண்டுமென அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.