தமிழக அரசின் முடிவுக்கு கலைஞர் மகிழ்ச்சி, காங்கிரஸ் எதிர்ப்பு!!

588

Naliniதமிழக சட்டப்பேரவையில் இன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 23 வருடங்களாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ஜெயந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்வது என்று முடுவெடுக்கப்பட்டது.

இந்த முடிவை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேச எழுந்தனர். அவர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதேவேளை இவர்களின் விடுதலை குறித்து, திமுக தலைவர் கலைஞர், ஏழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும். மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.