ஆசிரியையின் நிர்வாணப் படத்தை இணையத்தில் வெளியிட்ட மாணவன்!!

584

Nudeசக மாணவிகளின் நிர்வாணப் படங்களை வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அலை ஓய்வதற்கு முன்னதாக, ஆசிரியர் ஒருவரின் நிர்வாணப்படத்தை வெளியிட்டதாக ஐஐடி மாணவர் ஒருவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிலாஸ்பூரைச் சேர்ந்த சூரஜித் குமார் ஜெயின் என்ற 18 வயது மாணவர் கோரக்பூர் ஐஐடியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்து வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரின் நிர்வாணப் படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப் பட்ட ஆசிரியை கடந்த மாதம் பொலிஸாரிடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் சூரஜித்தின் இணைய முகவரி சிக்கியுள்ளது.

சூரஜித் தான் ஆசிரியையின் படங்களை அவ்வாறு ஆபாசமாக பதிவேற்றம் செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்வதற்காக கோரக்பூர் விரைந்தனர் பொலிஸார்.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே மாணவர் தலைமறைவானதாக கல்லூரி வளாகத்தில் தெரிவித்துள்ளனர்.

மாணவருக்கும் ஆசிரியைக்கும் என்ன பிரச்சினை, ஏன் இவ்வாறு அம்மாணவர் செய்தார், தற்போது மாணவர் சூரஜித் எங்கே இருக்கிறார் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.