மட்டக்களப்பு திருமலை வீதியில் இன்று 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று 3 மணியளவில் மட்டக்களப்பு – திருமலை வீதியில் மோட்டார் சைக்கில் ஒன்றும் கன்டர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். கன்டர் வாகனமும் சிறிய சேதத்திற்கு உள்ளானது.
-ரமணன்-






