வவுனியா காஞ்சூரமோட்டைக்கு மின்சாரம் : ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு!!

643

வவுனியா வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட காஞ்சூர மோட்டை பகுதிக்கு மின்சாரம் வழங்குவதற்கு வனவளத்திணைக்களம் தடையாக இருப்பதாக கிராம மக்களால் ஒருங்கிணைப்பு குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் இன்று(18.09) இடம்பெற்றது.

இதன்போது காஞ்சூரமோட்டைக்கு மின்சாரம் வழங்குவதில் சில பி ரச்சனைகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானால் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

தாம் போ ரினால் இடம்பெயர்ந்த நிலையில் தமது காணிகளை சுவீகரித்துக்கொண்ட வனவளத் திணைக்களம் எந்த ஒரு செயற்பாட்டை செய்வதற்கும் தடையை ஏற்படுத்தி நிற்கின்றது.

பாழடைந்த வீடுகளும், கிணறுகளும், எமது காணியில் இருப்பதை அடையாளப்படுத்தியும் எமக்கான எந்த ஒரு அனுமதியையும் வனவளத்திணைக்களம் இதுவரை வழங்கவில்லை.

வீடமைக்க முடியவில்லை, விவசாயம் செய்யமுடியவில்லை. இதனால் வாழ்வதற்கான எமது உரிமைகள் நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வருவதாக அவர்கள் கு ற்றம் சுமத்தினர்.

முதற்கட்டமாக கிராமத்திற்கான மின்சாரத்தினை வழங்குவதற்கு சில மரங்கள் தடையாக இருப்பதாகவும் அதனை அகற்றுவதற்கு கூட வனத்திணைக்களம் முட்டுக்கட்டை போட்டுவருகின்றது.

இது தொடர்பாக பல ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர்களால் கு ற்றம் சாட்டப்பட்டது.

குறித்த கிராமத்திற்கு செல்லும் வீதி பிரதேச சபைக்குட்பட்டது. என்று சபை தெரிவிக்கின்றது. அப்படியானால் காடாக இருந்த பகுதிக்கு எதற்காக வீதி அமைக்கப்பட்டது.

எனவே அங்கு முன்னர் மக்கள் வசித்துள்ளமையினாலேயே வீதி அமைந்திருக்கின்றது. இங்கு ஒரு மு ரண்பாடான நிலமை காணப்படுகின்றது. என்று பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

குறித்த விடயங்கள் தொடர்பாக எதிரவரும் வாரம் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுப்பதாக தலைவரால் தெரிவிக்கப்பட்டது.