ரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் கலக்கப்போகும் கார்த்தி!!

759

Karthiரஜினி மூன்று வேடங்களில் நடித்து 1982ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய மூன்று முகம் படம் ரீமேக் ஆகிறது. இதில் ரஜினி வேடத்தில் கார்த்தி நடிக்கிறார்.

ஏற்கனவே மூன்று முகம் படத்தில் வரும் ரஜினியின் அலெக்ஸ்பாண்டியன் கரக்டர் பெயரை தனது படத்தின் தலைப்பாக்கினார் கார்த்தி. இப்போது அதே படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். ஏற்கனவே இருவரும் பையா, சிறுத்தை’ படங்களில் இணைந்து நடித்துள்ளனர். விஷ்ணுவர்த்தன் இப்படத்தை இயக்குகிறார்.

ரஜினிக்கு மூன்று முகம் திருப்புமுனை படமாக அமைந்தது. அலெக்ஸ்பாண்டியன் என்ற போலீஸ் கேரக்டரில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதன் ரீமேக் தனக்கும் முக்கிய படமாக இருக்கும் என்று கார்த்தி நம்புகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.