வெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் : பயத்தில் தந்தை : கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிலை!!

733

சுபாஷ்..

தமிழகத்தில் மருத்துவம் படித்தால் அதிக பணம் செலவாகும் என்று மகனை ரஷ்யாவிற்கு அனுப்பி படிக்க வைத்து வரும் கூலித் தொழிலாளி ஒருவர், கொரோனாவால் மகனின் மூன்றாம் ஆண்டிற்கான கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர் நகரை சேர்ந்த தம்பதி வெங்கடேஷ்-ஆதிலட்சுமி. வெங்கடேஷ் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாகவும், மனைவியான ஆதிலட்சுமி வீட்டு வேலையும் செய்து வருகின்றனர்.

இந்த தம்பதிக்கு சுபாஷ் என்ற ஒரே ஒரு மகன் உள்ளார். சுபாஷ் தற்போது, ரஷ்யாவில் உள்ள தம்பவ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.

மாணவர் சுபாஷ்க்கு சிறு வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சத்துடன் படித்து பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்றார். அதன் பின் 2018-ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுத்தி தேர்ச்சி பெற்றார்.

இதையடுத்து, தமிழகத்தில் மருத்துவம் பயில் ஆண்டிற்கு 20 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்பதால், சபாஷ்யின் ஆசிரியர் இந்துஜா வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க உதவி புரிந்தார்.

இதுகுறித்து கூலி தொழிலாளி வெங்கடேஷ் கூறுகையில், ரஷ்யாவில் முதலாம் ஆண்டு கல்விக்கட்டணம் 7 லட்சம் செலவானது. கொஞ்சம் பணம் சேமித்து வைத்திருந்தோம். சுபாஷின் ஆசிரியர் தன் நகைகளை கொடுத்து உதவினர். அதை வைத்து பணம் கட்டினோம்.

அதன் பின், இரண்டாம் ஆண்டு 3 லட்சம் கட்டணம். கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து பணத்தை கட்டினோம். தற்போது மூன்றாம் ஆண்டு படிக்கிறார். 3 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். கொரோனா தொற்று காரணமாக 6 மாதமாக வேலையும் இல்லை.

அக்டோபர் மாதத்திற்குள் கட்டணம் செலுத்தாவில்லையெனில் பாதியில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். எழுத படிக்க தெரியாத எங்கள் மகன் மருத்துவராக வேண்டும் என விருப்பப்பட்டான்.

அவனது கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பயம் இருப்பதாகவும், இதனால் தன் மகனின் கனவை நிறைவேற்ற உதவி கோரி காத்திருக்கிறார் வெங்கடேஷ்.

கொரோனா காரணமாக வேலையில்லாமல் தவித்து வரும் வெங்கடேஷ், தற்போது சாக்கடை தூர்வாரும் வேலைக்கு, நாள் ஒன்றிற்கு 500 ரூபாய் என கூலி வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.