இந்தியாவிடம் பணிந்தது இலங்கை!!

427

SLநிதி பகிர்வு, நிர்வாகம் உள்ளிட்ட பல மாற்றங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் சபை கொண்டு வந்த திட்டத்தை ஏற்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) நிர்வாகத்தில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என மூன்று நாடுகள் மட்டும் ஆதிக்கம் செலுத்துவது, நிதி பகிர்வு தொடர்பாக புதிய பரிந்துரைகள் கொண்டு வருவது என பல மாற்றங்கள் சமீபத்தில் கொண்டு வரப்பட்டன.

இந்த திட்டத்துக்கு நிரந்தர உறுப்பு நாடுகளில் தென் ஆபிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் என மூன்று கிரிக்கெட் சபைகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இருப்பினும் கடைசி நேரத்தில் தென் ஆபிரிக்கா ஆதரவு தெரிவித்தது, இலங்கை- பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறின.

இதற்கிடையே உலக கிரிக்கெட்டில் தனித்து விடப்பட்டதாக இலங்கை உணர்ந்தது, சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்திலும் இலங்கை வீரர்கள் பெரியளவில் புறக்கணிக்கப்பட்டனர்.
இதனால் வேறு வழியில்லாமல் இந்தியா முன்வைத்த புதிய திட்டத்தை ஏற்பது என இலங்கை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் நிஷாந்தா ரணதுங்கா வெளியிட்ட அறிக்கையில், சிங்கப்பூரில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டம் குறித்து எஸ்.எல்.சி, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் விவரங்களை தெரிந்து கொண்ட பின், புதிய திட்டங்களுக்கு ஒருமனதாக ஆதரவு தருவது என உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.

ஏனெனில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் பங்கேற்கும் தொடரின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளோம். ஏனெனில் அடுத்த 7 ஆண்டுகளில் மற்ற அணிகளுடன் விளையாடும் தொடரில் 370 கோடி வருமானம் கிடைக்கும்.

அதேநேரம் இந்தியாவுடன் ஒரு மாதம் போட்டிகளில் பங்கேற்றால், 173 கோடி வந்துவிடும். ஒரு இங்கிலாந்து தொடரில் 74 கோடி, அவுஸ்திரேலியா எனில் 45 கோடி கிடைத்துவிடும்.

அதாவது இந்த மூன்று நாடுகளுடன் போட்டிகளில் பங்கேற்றால் 300 கோடி வரை வருமானம் வரும், தீர்மானத்தை எதிர்ப்பதால் எங்களுக்கு இழப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளார்.