ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை : ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்!!

1245

Rahulஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழ்வர் விடுதலை செய்யப்பட்டமைக்கு ராகுல் காந்தி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் இன்று தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களது அதிருப்தியினை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து அமேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்..

நான் மரண தண்டனைக்கு எதிரானவன். மரண தண்டனை விதிப்பதால், என் தந்தையும் திரும்ப வரப்போவது இல்லை. ஆனால் ஒரு நாட்டின் பிரதமரை கொன்றவர்களையே தண்டிக்காமல் விட்டால் பின்னர் சாதாரண மக்கள் அரசிடம் இருந்து நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

ராஜீவ் காந்தி என் தந்தை என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. நாட்டின் நலனுக்காக மட்டுமே சொல்கிறேன். ஏனெனில், சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இதை நான் உங்கள் முடிவிற்கே விடுகிறேன் என்றார்.